பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!


பிரதமர் நரேந்திர மோடி

சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ஏப்ரல் 9-ம் தேதி பிரசாரம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும் என்ற அறிவிப்போடு நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் கணிசமான வெற்றியை பாஜக வெற்றி பெற வேண்டும் என்று கட்சி தலைமை தீவிர பணியாற்றி வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நினைவு விழா பொதுக்கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து நெல்லை, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இந்த நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி சென்னைக்கு பிரதமர் மோடி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்து. அப்போது சென்னையில் வாகன அணிவகுப்பிலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி

மேலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்குசேகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான, பாதுகாப்பு ஆய்வுகள் குறித்து, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பயண திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி, பெரம்பலூர், வேலூர் ஆகிய தொகுதிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

x