குட்நியூஸ்...பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்குகிறது!


அரசு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சொல்வது வாடிக்கையான ஒன்று. அப்போது கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்வது வழக்கம். அந்தவகையில் பொங்கல் பண்டிக்கைக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

தமிழக அரசு சார்பில் 17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் பொங்கலை முன்னிட்டு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவுக்கு சென்னை கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரத்தில் ஒரு மையமும் செயல்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மையங்களில் நேரடியாக சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல https://www.tnstc.in/home.html என்ற இணையதளத்தின் வாயிலாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த முறை கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், அங்கு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

x