ராகுலை எதிர்க்கும் பாஜக வேட்பாளர் மீது 242 கிரிமினல் வழக்குகள்... வேட்புமனுவில் அதிர்ச்சி தகவல்!


சுரேந்திரன்

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுரேந்திரன் மீது 242 கிரிமினல் வழக்குகளில் உள்ளன.

ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரும் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டதோடு கடந்த தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதியில் தோல்வியுற்ற நிலையில் வயநாடு மக்கள் அவரை அமோக வெற்றி பெற வைத்தார்கள். அதனால் இந்த முறை மீண்டும் அவர் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் டி. ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

இவர்களை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் மாநில தலைவராக இருக்கும் சுரேந்திரன் போட்டியிடுகிறார். இதற்காக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் அவரது வேட்பு மனுவில் அவர் மீது 242 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

சுரேந்திரன்

அவற்றில் 237 வழக்குகள் சபரிமலை போராட்டங்களுக்காகவும், ஐந்து வழக்குகள் கட்சியின் போராட்டங்களில் கலந்து கொண்டதற்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல்களை அவர் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த முறை ராகுலை எதிர்த்து பலமான வேட்பாளர்கள் மோதுவதால் போட்டி மிக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மீது 211 வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

x