மருத்துவமனை உள்நோயாளிகளுக்கும் தபால் வாக்குரிமை வேண்டும்... காங்கிரஸ் முக்கிய கோரிக்கை!


காங். நிர்வாகி சையது

மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகள் மற்றும் கல்லூரி தங்கு விடுதிகளில் தங்கும் மாணாக்கர்ளுக்கும் தபால் வாக்குரிமை அளிக்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம்

இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தமிழகத்தில் முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பேரணி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்ட வருகிறது.

இந்த நிலையில், 100% வாக்குப்பதிவை நிறைவேற்ற நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள 20 கோடி மக்கள் வாக்களிக்கும் வகையில் மருத்துவமனைகளில் உள்ள உள் நோயாளிகளுக்கும் அவர்களுக்கு உதவியாக உள்ளவர்களுக்கும், கல்லூரிகளில் தங்கும் விடுதிகளில் தங்கி படிக்கக்கூடிய கல்லூரி மாணாக்கர்களுக்கும் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் அவர்களுக்கும் தபால் வாக்குகள் வழங்க நடவடிக்கை கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு சார்பில் இன்று மதுரை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் உள்ள நோயாளிகள்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை தொகுதி பணிக்குழு நிர்வாகி சையது, ” நாடு முழுவதிலும் பல லட்சம் மக்கள் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளாக இருப்பதன் காரணமாக 100% வாக்களிப்பது என்பது சாத்தியமில்லாதது. எனவே அவர்களுக்கும் தபால் வாக்குகளை வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் புகார் அளித்து வருகிறேன். இந்த ஆண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி புகார் அளித்துள்ளேன்” என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...
வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

x