தமிழ்நாட்டில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் 1,120 ரூபாய் உயர்ந்து, 51 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. நேற்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 6,250 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50,000 ரூபாயை எட்டி புதிய உச்சம் பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,120 ரூபாய் அதிகரித்து 51 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்திருப்பது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 80 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 80,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.