கீழடியில் தானிய சேமிப்பு கலன் கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


கோப்புப் படம்

திருப்புவனம்: கீழடியில் தானிய சேமிப்பு சுடுமண் கலன், கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டு கண்ணாடிப் பாசி மணிகள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், செங்கல்கள், செம்பு பொருட்கள், சுடுமண் கழிவுநீர் குழாய், தந்தத்தால் ஆன ஆட்டக் காய்கள், சிவப்பு நிற சுடுமண் பானை போன்றவை கண்டெடுக்கப்பட்டன. தற்போது தானியங்கள் சேகரிக்க பயன்படும் சுடுமண் கலன் (குழுமை) உடைந்த நிலையில் கிடைத் துள்ளது.

அதேபோல் கொந்தகையில் ஒரு வாரத்துக்கு மேலாக 40 அடி நீள, 20 அடி அகல குழி தோண்டப்பட்டு வருகிறது. இந்த குழியில் முதுமக்கள் தாழி முகப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதைத் தோண்டி எடுத்த பின்னரே என்ன பொருட்களை வைத்துள்ளனர் என்பது தெரிய வரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

x