தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் கே.என்.நேருக்கு திடீரென மயக்கம் வந்ததால், அவர் பாதியில் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு கிளம்பிச் சென்ற சம்பவம் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன், அருண் நேரு வேட்பாளராக திமுக சார்பில் களமிறங்கியுள்ளார். பெரம்பலூர் தொகுதியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குளித்தலை சட்டமன்ற தொகுதியும் இடம் பெற்றுள்ளது. இன்று காலை தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைச்சர் நேரு, வேட்பாளர் அருண் நேரு ஆகியோர் குளித்தலை பகுதிக்கு வருகை தந்தனர்.
அங்குள்ள தோகைமலை பகுதியில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. பிரச்சாரம் துவங்கிய சில நிமிடங்களில் திடீரென அமைச்சர் கே.என்.நேருவிற்கு மயக்கம் ஏற்பட்டதால் பிரச்சாரத்தை மேற்கொண்டு தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ”எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்” என்று மட்டும் கூறி விட்டு அவர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய அவர், காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!