புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: திருவள்ளூர், செங்குன்றத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் 


புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூரில் இன்று காலை ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்: புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர் மற்றும் செங்குன்றத்தில் இன்று காலை ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறவேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், அரசு அனுமதியின்றி இயங்குகின்ற பைக் டாக்சியை தடைசெய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் தமிழகம் முழுவதும் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மற்றும் செங்குன்றத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் கரிமுல்லா, துணைத் தலைவர் வேலு, மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் துளசிநாராயணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, கோரிக்கை முழக்கமிட்டனர்.

x