திருச்சி மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணியின் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் தனது மாநகராட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக சைலன்ட் மோடில் இருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது. பாஜக கூட்டணியில் இணைந்துள்ள அந்தக் கட்சி இரண்டு மக்களவை தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளது. அவற்றில் தேனி தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் தினகரனும், திருச்சி தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிடுகிறார்கள்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் அமமுகவுக்கு ஓரளவுக்கு வாக்கு பலம் உள்ளது. அதனால் தங்களுக்கு சாதகமான இந்த இரண்டு தொகுதிகளையும் பாஜகவிடம் கேட்டு பெற்றுள்ள மகிழ்ச்சியில் தினகரன் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக களமிறங்கி விட்டார். எப்படியும் இந்த இரண்டு தொகுதிகளையும் வென்று மீண்டும் தங்கள் கட்சியை உயிர்ப்பித்து விட வேண்டும் என்று அவர் ஆவலாக உள்ளார்.
இந்நிலையில் திருச்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் செந்தில்நாதன் திருச்சி மாநகராட்சி 47 வார்டு உறுப்பினராக வெற்றி பெற்று பதவியில் இருந்து வருகிறார். தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதால் தனது மாமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இன்று காலை திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற செந்தில்நாதன் அங்கிருந்த மேயர் அன்பழகனிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். இது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில் அவர் விரைவில் திருச்சி மக்களவைத் தொகுதிக்கு அமமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!
லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!
யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!
'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!