ராமேசுவரம் அருகே கடலுக்கு அடியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்


ராமேசுவரம் அருகே அக்காள் மடம் கடலுக்கு அடியில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் கடலோர காவல்படை வீரர்.

ராமேசுவரம்: சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பாக ராமேசுவரம் அருகே கடலுக்கு அடியில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன.

சர்வதேச அளவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம், செப்டம்பர் மாதம் மூன்றாம் சனிக்கிழமை (செப்டம்பர் 21) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி ராமநாதபுரம் வனஉயிரின கோட்டம் ராமேசுவரம் அருகே அக்காள் மடம், பிரப்பன் வலசை கடற்கரை பகுதிகளில் வனத்துறையின் நீச்சல் வீரர்கள் ஸ்கூபா டைவிங் உடைகள் அணிந்து கடலுக்கு அடியில் மூழ்கி கடலடியில் தேங்கியிருந்த 220 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.

ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் நடைபெற்ற கடலோர தூய்மை பணி.

மேலும், வேல் இந்தியா பவுண்டேசன் ராமேசுவரம் சங்குமால் கடற்கரை பகுதியில் தூய்மை பணி நடந்தது. அதன் நிறுவனர் மணிகண்டன் தூய்மை பணிகளை துவக்கி வைத்தார். இதில் திரளான தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

x