குரூப் 2 நேர்முகத்தேர்வுக்கு தயாராக இருங்க... அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!


டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 பதவியில், 29 காலியிடங்களை நிரப்ப மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குரூப் - 2 தேர்வு

தமிழக அரசு துறைகளில், குரூப் - 2 தேர்வின் மூலம் 5 ஆயிரத்து 413 காலிப் பணியிடங்களை நிரப்ப, கடந்த 2022 மே மாதம் முதல்நிலை தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி இரண்டாம் நிலை தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில், தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு, நேர்முகத் தேர்வு நடைபெறும். அதன்படி, 161 பதவிகளுக்கு, இரண்டு கட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, அதற்கான பணிகளும் ஒதுக்கப்பட்டன. எனினும் மீதமுள்ள 29 காலி இடங்களை நிரப்ப வேண்டும். முன்னதாக அவற்றில் சேர, முன்னிலை தரவரிசையில் உள்ள விண்ணப்பதாரர்கள் முன்வரவில்லை.

நேர்முக தேர்வு

இந்நிலையில், மூன்றாம் கட்ட நேர்முக தேர்வு நடத்தி, காலியிடங்களை நிரப்ப உள்ளதாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவித்தது. அதன்படி மீதமுள்ள 29 காலியிடங்களில் சேர விருப்பம் தெரிவிப்போர், தங்கள் விபரத்தை பதிவு செய்ய, 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின் நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு, நேர்முக தேர்வு நடத்தப்படும் எனவும், நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகளுக்கு மதிப்பெண் மற்றும் தரவரிசை அடிப்படையில், அடுத்த மாதம் அதன் முடிவு வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

x