பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி இணைந்ததையடுத்து கடந்தமுறை போட்டியிட்ட திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் பாமக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் பணிகளை முன்னதாகவே துவக்கிய பாஜகவினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட பாஜகவினர் பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதையடுத்து தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் பாஜக அலுவலகத்திற்கு அருகிலேயே திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டமன்ற தொகுதிவாரியாகவும் அடுத்தடுத்து தேர்தல் அலுவலகங்களை திறந்து பாஜகவினர் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்துவந்தனர், ‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி’ என சின்னத்தையும் சுவர்களில் எழுதி பிரச்சாரத்தையும் துவக்கியிருந்தனர்.
திண்டுக்கல் தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்ய கட்சித்தலைமை அனுப்பிய குழுவில் பலரும் ஆர்வமுடன் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். நேற்று முன்தினம் வரை திண்டுக்கல் தொகுதியில் பரபரப்பாக இயங்கிவந்த பாஜகவினர் கூட்டணியில் பாமக இணைந்ததையடுத்து திண்டுக்கல் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுவிடுமோ என்ற அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. எனவே பாமகவின் சின்னம் தொகுதியில் பரிச்சையமானது என்பதால் இந்த முறையும் திண்டுக்கல் தொகுதியை பாஜக கூட்டணியில் கேட்டுப்பெற பாமக முடிவு செய்துள்ளது. அவ்வாறு போட்டியிடும்பட்சத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குவித்தியாசத்தில் தோல்வியடைந்த கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமாவிற்கு திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொண்டுவந்த பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சியில் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!
வாயில் தீ கொண்டு ஓவியர் வரைந்த' தல' படம்... வைரலாகும் மாஸ் வீடியோ!
சவுக்கு சங்கர் மீது சாட்டையைச் சொடுக்கிய உயர் நீதிமன்றம்... வீடியோ வருமானத்தை செலுத்த உத்தரவு!
பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!
சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!