இலங்கை அரசை கண்டித்து மண்டபத்தில் எஸ்டிபிஐ சார்பில் ரயில் மறியல் போராட்டம்


மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம்.

ராமேசுவரம்: தமிழக மீனவர்களை மொட்டையடித்து, கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த இலங்கை அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை எஸ்டிபிஐ கட்சி சார்பாக நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு மீனவரணி மாவட்ட தலைவர் பகுரு தீன் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் கண்டன உரையாற்றினார்.

மதிமுக மாநில மீனவரணி செயலாளர் பேட்ரிக், சிபிஐ மாவட்டச் செயலாளர் பெருமாள், மண்டபம் அதிமுக நகர செயலாளர் சீமான் மரைக்காயர், விசைப் படகு மீனவப் பிரதிநிதிகள் சகாயம், எம்ரிட், சின்னதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் இரவு விடுதலை செய்யப்பட்டனர்.

x