ராமேஸ்வரம் - புவனேஷ்வர், புதுச்சேரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறித்த புதிய அறிவிப்பு


புதுச்சேரி: புதுச்சேரி - ஹவுரா, ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ராஜமுந்திரியில் 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

புதுச்சேரியிலிருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் மேற்குவங்க மாநிலம் ஹவுராவுக்கு அதிவேக விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயிலானது விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, திருப்பதி, ரேணி குண்டா உள்ளிட்ட 15 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்நிலையில், ஆந்திராவின் ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதையடுத்து வரும் 22ம் தேதி முதல் ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு வரும் விரைவு ரயிலானது ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதேபோல் மறு மார்க்கத்தில் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு ஹவுரா செல்லும் விரைவு ரயிலானது 25-ம் தேதி முதல் ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயிலும் ராஜமுந்திரியில் நின்று செல்லும் வரும் 20ம் தேதி முதல் புவனேஷ்வரில் இருந்து ராமேஸ்வரம் வரும் ரயிலும் 22ம் தேதி முதல் ராமேஸ்வரத்திலிருந்து புவனேஸ்வர் செல்லும் எக்ஸ்பிரஸும் ராஜமுந்திரியில் நின்று செல்லும்.

ராஜமுந்திரி ரயில் நிலைய நிறுத்த நடவடிக்கை 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் பிறகே ராஜமுந்திரியில் இந்த ரயில்கள் இரண்டும் நிரந்தரமாக நின்று செல்லுமா என தெரியவரும்.

x