திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்


திண்டுக்கல்லில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாமில் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர் மொ.நா.பூங்கொடி. | படம்: நா.தங்கரத்தினம்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், மாதாந்திர உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பெட்ரோல் ஸ்கூட்டர், பசுமை வீடு மற்றும் வங்கிக் கடனுதவி உட்பட மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 110 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், 3 நபர்களுக்கு மூன்று சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு தையல் இயந்திரம், 6 பேருக்கு ஊன்றுகோல் என மொத்தம் 10 பேருக்கு ரூ.40,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மொ.நா.பூங்கொடி வழங்கினார்.

இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

x