அதிமுக-வுடன் பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்லுக்கான கூட்டணிகள் இறுதிசெய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்துள்ளது. எனினும், அதிமுக இதுவரை எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி என்பதை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
அதிமுகக்கு ஆதரவு தெரிவிப்பதாக சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் அறிவித்துள்ள நிலையில், பாமக மற்றும் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகச் சொல்லப்பட்டு வந்தது. அதன்படி, அதிமுக தேர்தல் குழுவினர் இன்று பாமகவினரை சந்தித்துப் பேசவுள்ளனர். அதேபோல, தேமுதிமுகவுடன் தேர்தல் தொகுதி பங்கீட்டை உறுதி செய்துள்ளது அதிமுக.
அதன்படி 4 தொகுதிகளை தேமுதிகவுக்கு வழங்க அதிமுக முடிவு செய்துள்ளது. பாமகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படும். அதன் பிறகு இந்த இரு கட்சிகளுடனான தொகுதி ஒப்பந்தம் நாளை மறுநாள் கையெழுத்தாகவுள்ளது.