இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வேண்டும்... தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம்!


ஓபிஎஸ்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி முன்னாள் முதல் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இரட்டை இலை சின்னம்

அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர். இது குறித்து நடந்து வந்த வழக்குகளில் அதிமுக கட்சி,பெயர், சின்னம் ஆகியவை எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து கட்சி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஓபிஎஸ் க்கு கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக ஓபிஎஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவும், படிவம் ஏ மற்றும் பி ஆகியவற்றில் கையெழுத்து இடும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கும்படியும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஓபிஎஸ் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x