விசிக மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் வேலை: ஹெச்.ராஜா விமர்சனம்


கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா. அருகில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர். | படம்: ஜெ.மனோகரன்

கோவை: விசிக தலைவர் திருமாவள வன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் வேலை என்று பாஜக தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறி னார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பணிகளுக்காக நிலம் கையகப்படுத்திக் கொடுப்பதில் தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை என்று மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்தும் நிலை யில், தமிழக அரசு திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, தமிழகத் தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுமாறு முதல்வருக்கு திருமாவளவன் அழுத்தம் கொடுக்காதது ஏன்? எனவே, திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு, மக்களை ஏமாற்றும் வேலையாகும். திமுகவில் போதை அணி என்ற தனி அணியையே உருவாக்கலாம். மாநில அரசு 500 மதுக்கடைகளை மூடிவிட்டதாக கூறுகிறது. ஆனால், 1,000 கிளப் திறந்துள்ளனர். பிஹாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு சாத்தியம்தான்.

பாஜக, அதிமுக கூட்டணி தொடர்பாக கேள்விகளை என்னிடம் கேட்கவேண்டாம். கூட்டணி குறித்து மத்திய தலைமைதான் முடிவெடுக்கும். எங்களுடன் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன், நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். நான் கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெறத் தகுதியற்றவர் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறியுள்ளார். நான் காலாவதியாகிவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். உண்மையில் காலாவதியான அவர், தனது மகன் இறந்ததால் எம்எல்ஏவாகி உள்ளார். அவர் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.

பன், ஜிலேபிக்கு 5 சதவீதம்தான் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டிக்குப் பிறகு பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜாப் ஒர்க்-களுக்கு முன்பும் வரிஇருந்தது. அமெரிக்காவில் இந்தியாவுக்கு விரோதமாக ராகுல் காந்தி பேசி வருகிறார். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்

x