வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று திறந்திருக்கும்


சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே மிகப்பெரிய, பழமையானஉயிரியல் பூங்காவாகும். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. தினமும் 4 ஆயிரத்துக்கும்மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவுக்குவந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பூங்காவுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். இன்று (செப்.17, செவ்வாய்க்கிழமை) மிலாடி நபிதிருநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே பூங்காவுக்கு நிறைய பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பூங்காதிறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும்பாம்புப் பண்ணை ஆகியவையும் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படும் நிலையில், அவையும்இன்று திறந்திருக்கும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.

x