செங்கல்பட்டு: குரூப்-2 தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,299 பேர் தேர்வு எழுதவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப் 2 பதவிகளில் உள்ள 507 காலிப்பணியிடங்கள், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப் 2ஏ பதவிகளில் உள்ள ஆயிரத்து 820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த ஜூன் மாதம் வௌியிட்டது.
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்களில் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 42 தேர்வு மைங்களில் 21,599 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு நடைபெறுவதைக் கண்காணிக்க தேர்வுக்கூட முதன்மைக் கண்காணிப்பாளர்கள், நடமாடும் குழுக்கள், பறக்கும்படை மற்றும் ஆய்வு அலுவலர்கள் 400-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டத்தில் குரூப் 2 தேர்வை எழுத 21,599 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 14,300 மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். எஞ்சிய 7,299 பேர் இத்தேர்வை எழுதவில்லை.