காங்கிரசுக்கு கரூர், திருச்சி, ஆரணி இல்லை... டெல்லிக்கு அனுப்பப்பட்டது இறுதிப் பட்டியல்!


திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம்

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்று இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தப் பட்டியல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திமுக, காங்கிரஸ் தலைவர்கள்

மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த வாரம் கையெழுத்தானது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் கையெழுத்திட்டனர்.

அதன்படி தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவந்த நிலையில் இன்று இரு தரப்புக்கும் ஏற்ற வகையில் பட்டியல் இறுதிசெய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

இதில் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட புதுச்சேரி உள்ளிட்ட பத்து தொகுதிகளில் இந்த முறை ஏழு தொகுதிகளை திரும்ப வழங்க முன் வந்துள்ள திமுக, கரூர், திருச்சி, ஆரணி ஆகிய தொகுதிகளை காங்கிரசுக்கு வழங்க முடியாது என தெரிவித்து விட்டதாக தெரிகிறது. அதற்கு பதிலாக இம்முறை மயிலாடுதுறை, கடலூர், தென்காசி தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க திமுக முன் வந்துள்ளது.

திமுக இறுதி செய்துள்ள இந்தப் பட்டியலை அகில இந்திய கமிட்டியின் ஒப்புதலுக்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி அனுப்பி வைத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதல் அளித்த பிறகு, நாளை காலை காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x