சற்று முன்... ஹரியாணாவில் பாஜக அமைச்சரவை ராஜினாமா!


மனோகர் லால் கட்டார்

ஹரியாணா மாநிலத்தில் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹரியாணாவில் உள்ள 10 மக்களவைத் தொதிகளிலும் பாஜகவே போட்டியிட முடிவு செய்தது. இதனால், ஜனநாயக் ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, ஆட்சி கவிழுவும் அபாயம் ஏற்பட்டதால் பாஜக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சற்று முன்னர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவை ஆளுநரைச் சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்தது.

ஹரியாணா சட்டப்பேரவையில் உள்ள 90 உறுப்பினர்களில், பாஜகவுக்கு 41 உறுப்பினர்களும், காங்கிசுக்கு 30 உறுப்பினர்களும், ஜேஜேபி கட்சிக்கு 10 உறுப்பினர்களும் உள்ளனர். இது தவிர 7 சுயேச்சை எம்எல்ஏக்-களும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) மற்றும் ஹரியாணா லோகித் கட்சிக்கு தலா ஒரு எம்எல்ஏ-வும் உள்ளனர்.

இந்நிலையில், மனோகர் லால் கட்டார் ராஜினாவையடுத்து, சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹரியாணா விரைந்துள்ள மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் தலைநகர் சண்டிகரில் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். இவர்கள் அடுத்தகட்ட நடவடிகைகள் குறித்து இன்று ஆலோசனை நடத்துகிறார்கள்.

x