டிகிரி படித்திருந்தால் போதும்... இந்திய அரசு நிறுவனத்தில் வேலை!


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் 323 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு மார்ச் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில்(EPFO) தனி உதவியாளர் பணியிடங்களில் ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி 323 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கான ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://upsc.gov.in/ல் 27.03.2024 @ 06.00 PM வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம்

இதற்கு மாதச்சம்பளமாக ரூ.50,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 27.03.2024 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 30வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஓபிசி விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். பிடபிள்யூபிடிஎஸ் விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 27.03.2024 @ 06.00 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x