இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்காது!


இன்று நவம்பர் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பண்டிகைக்கு முன்னதாகவே பொருட்களை வாங்க வசதியாக விடுமுறை அளிக்கப்பட்டாமல் இருந்த நிலையில், அந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகள் சார்பில் தமிழ்நாட்டில் கிட்டதட்ட 35 ஆயிரத்துக்கும் அதிகமான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பண்டிகை நாட்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக கடை திறந்திருக்கும் நாட்களில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் குறிப்பிட்ட கடைகள் வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்கள் பிரிக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டு வந்தது.

இதனிடையே நடப்பாண்டு தீபாவளி பண்டிகை கடந்த நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இப்பண்டிகை வந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, பொதுமக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் நவம்பர் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நவம்பர் 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறையின்றி ரேஷன் கடைகள் செயல்பட்டது.

ரேஷன் கடை

பணிபுரிந்த அந்த நாட்களை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 13ம் தேதி மற்றும் 25ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (நவம்பர் 25) ரேஷன் கடைகள் செயல்படாது. எனவே பொதுமக்கள் மழைக்காலங்களில் ரேஷன் கடைகளுக்கு சென்று ஏமாற்றமடைவதைத் தவிர்த்திடுங்க. நாளை வழக்கம் போல் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்.

x