உடுமலை அருகே 14 மலை கிராமங்களுக்கு சாலை அமைக்க ஆய்வு: அமைச்சர் மதிவேந்தன் தகவல


கோவை: உடுமலை வனச்சரகம் ஆனமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 14 மலை கிராமங்களுக்கு வனப்பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார்.

கோவை வனக் கல்லூரியில் இன்று நடந்த தியாகிகள் நினைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: "வனத்துறை சார்பில் யானை - மனித மோதலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானை வலசை பாதைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன.

வன பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு, சீருடைக்கான கூடுதல் தொகை வழங்குவது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். உடுமலை வனச்சரகம் ஆனமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட குருமலை உள்ளிட்ட 14 மலை கிராமங்களுக்கு வனப்பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

x