சென்னையில் பாதுகாப்பு பணியில் 16,500 போலீஸார்: விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு வழிகாட்டுதல் வெளியீடு


சென்னை: அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுரை வழங்கி உள்ளார். மேலும், விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் 16,500 போலீஸார் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் சென்னையில் 1,524 விநாயகர் சிலைகள் (பெரிய அளவிலான சிலைகள்) வைக்கப்பட்டன. அதற்கு தினமும் வழிபாடு நடைபெற்று வருகிறது.

4 கடற்கரை பகுதிகள்: இச்சிலைகளை 11 (இன்று), 14, 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க போலீஸார் அனுமதி வழங்கி உள்ளனர். அதன்படி, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடுமீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க சென்னை போலீஸார் அனுமதி வழங்கி உள்ளனர்.

விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியான முறை நடைபெறவும், எந்தவித இடையூறுமின்றி சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவும் சென்னையில் 16,500 போலீஸார் மற்றும் 2,000ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.

பிரத்யேக ஏற்பாடுகள்: சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிலைகளை கரைப்பதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர்கள் மூலம் கண்காணித்தும், குதிரைப்படைகள் மற்றும் கடல் மணலில்செல்லும் பிரத்யேக வாகனம் (பீச்பக்கி) மூலமும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்களை போலீஸார் வகைப்படுத்தியுள்ளனர்.

அவ்வழியே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.

வழித்தட விவரம்: சென்னை பெருநகரில் நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம்,சவுகார்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்,தேனாம்பேட்டை, தி.நகர், எம்.ஜி.ஆர். நகர், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்கள் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாகஊர்வலமாக சென்று, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

இதேபோல, அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர் கடலிலும், வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம்,தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர்,கொடுங்கையூர் மற்றும் மாதவரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர்சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலிலும்,

திருவொற்றியூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் கடலில் கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

x