கோவை விமான நிலையத்தில் குரங்கு அம்மை கண்காணிப்பு குறித்து அதிகாரி ஆய்வு

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் அருணா விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

கோவை: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரகத்தின் இணை இயக்குநர் மருத்துவர் செந்தில்குமார் கோவை விமான நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் இந்தியா வந்த ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த அந்தந்த மாநில சுகாதாரத்துறைக்கு, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை விமான நிலையத்தில் ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி நாடுகளுக்கு கோவையில் இருந்து நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழக சுகாதாரத்துறை மற்றும் விமான நிலைய நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தானியங்கி இயந்திரத்தின் உதவியுடன் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் இணை இயக்குநர் மருத்துவர் செந்தில்குமார் கோவை சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தார். மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் அருணா விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரகத்தின் இணை இயக்குநர் மருத்துவர் செந்தில்குமார் கோவை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் இந்தியா வந்த ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த அந்தந்த மாநில சுகாதாரத்துறைக்கு, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை விமான நிலையத்தில் ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி நாடுகளுக்கு கோவையில் இருந்து நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழக சுகாதாரத்துறை மற்றும் விமான நிலைய நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தானியங்கி இயந்திரத்தின் உதவியுடன் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் இணை இயக்குநர் மருத்துவர் செந்தில்குமார் கோவை சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து விழிப்புடன் செயலாற்ற அறிவுறுத்தினார்.

x