போனஸ் கோரி பேரவை முற்றுகை போராட்டம்: தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் முடிவு


தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்  வண்டலூரில் நடைபெற்றது.

வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க கோரி சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் தலை நகர் தமிழ் சங்கத்தில் மாநில தலைவர் அந்தோணிமுத்து தலைமையில் நடைபெற்றது.

மாநில சிறப்பு தலைவர் கொ.கோவிந்தராஜ், மாநில பொருளாளர் நாராயணன், மாநில பொதுச்செயலாளர் சொ.இரணியப்பன் உட்பட மாநில நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 2025 பிப் 23,24,25 மூன்று நாட்கள் புது தில்லியில் நடைபெறும் ஏஐசிசிடியு அகில இந்திய மாநாட்டிற்காக தமிழ்நாட்டில் 1 லட்சம் கட்டுமான தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு, வீட்டு மனை பட்டா மற்றும் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பிரச்சார இயக்கம் மேற்கொள்வது என்றும் 2025 ஜன 7 கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் கோரி சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. நிறைவாக ஏ ஐ சி சி டி யு மாநில செயலாளர் அதியமான் சிறப்புரையாற்றினார். புரட்சிகர இளைஞர் கழகம் மாவட்ட தலைவர் இராஜேஸ்குமார் நன்றி கூறினார்.

x