மதுரை: விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களை, அமைச்சர் உதயநிதிக்கு வரவேற்பு அளிக்கும் பணிகளில் வேலைக்கார்களாக ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கும், திமுக அரசுக்கும் சட்டமன்ற எதிர்கட்சத் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழக மாணவ, மாணவிகள் அகில இந்திய அளவிலும், உலகளவிலும் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக அதிமுகவின் 30 ஆண்டு கால ஆட்சிகளில் பல்வேறு சிறப்பு திட்டங்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு மாணவர்களுடன் அன்டை நாட்டு விளையாட்டு வீரர்களுடன் நல்ல உடல் திறத்தோடு விளையாடுவதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 1992ம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்கினார்.
இதன் மூலம் மாவட்டங்கள் தோறும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து தேவையான உணவுகளை வழங்கியும், அவர்களுக்கு வேண்டிய விளையாட்டுப் பயிற்சிகளை பெறும் வகையிலான சாதனைங்களை கொடுத்தும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் சிறந்த வீரர்கள் உருவாக்கப்பட்டனர். இது தவிர மாவட்டங்கள் தோறும் விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்தப்பட்டு விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தங்கி பயிற்சி பெறவும், பள்ளிக்கு செல்லும் வகையில் விளையாட்டு விடுதிகளும் பெருமளவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்திக் கொடுத்தார். அதனாலே அதிமுக ஆட்சியில் தமிழகம் விளையாட்டுத் துறையில் உச்சம் தொட்டது.
ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 40 மாத காலத்தில் தமிழக விளையாட்டுத் துறை, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கையில் சிக்கி சின்னா பின்னமாகி உள்ளது. விளையாட்டு வீரர்களையும், விளையாட்டையும் ஊக்குவிப்பதற்கு பதிலாக கடைசியில் வெற்றிக் கோப்பை வாங்கி உலக அளவில் வெற்றிப் பெற்றதாக ஆட்சியர்களுடன் நின்று புகைப்படம் எடுத்த வீரர்களையும் பாராட்டிய சம்பவம், தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.
தற்போது சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக சென்ற உதயநிதியை வரவேற்க விளையாட்டு விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை வைத்து கொடி, தோரணங்களை கட்ட சொல்லியும், மைதானத்தை சுத்தப்படுத்த சொன்ற வேதனையான நிகழ்வு நடந்தள்ளது. இந்த வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்கில் பரவி விளையாட்டு வீரர்களுக்கு இந்த திமுக ஆட்சி ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டு வீரர்களை வேலைக்காரர்கள் போல் நடத்தும் இந்த திமுக ஆட்சிக்கும், விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் அதிமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.