முதல்வர் ஸ்டாலின் எந்த சாதனையும் செய்யவில்லை:  பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்


விழுப்புரம்: காலை உணவுத் திட்டம் தவிர கடந்த 3 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் எந்த சாதனையும் செய்யவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை க்கூட நிறைவேற்றவில்லை. குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டம், நீட் விலக்கு, 5.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை நிறைவேற்றப்படவே இல்லை. ஆனால் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகக் கூறி, மக்களைஏமாற்றுகின்றனர். தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அரசின் சான்றிதழ்களைப் பெற ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இது அரசுக்கு அவமானம். எனவே, அடுத்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பொது சேவை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் காலை உணவுத் திட்டத்தைத் தவிர, குறிப்பிடும்படியான எந்த சாதனையும் செய்யவில்லை. மீதமுள்ள ஆண்டுகளில் சாதனை படைத்து, முத்திரை பதிக்க வேண்டும்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறினாலும், அதை நடைமுறைபடுத்தவில்லை. மது உள்ளிட்ட போதைஇல்லாத, மழை நீர் வீணாகாதமாநிலத்தை உருவாக்கும் கனவுபாமகவுக்கு உள்ளது. எங்களுக்கு6 மாதம் ஆட்சியைக் கொடுத்தால் இவற்றை நிறைவேற்றுவோம்.தமிழகத்தில் கொலை, கொள்ளைஅதிகம் நடைபெறுவதை தடுக்க,காவல் துறை விழிப்புடன் இருக்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து, மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவேன். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படைதன்மையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

x