ஸ்டாலினுக்கு அமெரிக்க தமிழ் சங்கங்கள் வாழ்த்து


சென்னை: முதல்வர் ஸ்டாலினை, சிகாகோவில் பல்வேறு தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்தித்து, அதிக முதலீடுகள் கிடைக்க வாழ்த்தினர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை சிகாகோவில் பல்வேறு தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். அந்த வகையில், தமிழ்நாடு அறக்கட்டளை, வடஅமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, சிகாகோ தமிழ்ச் சங்கம், அறம் சிகாகோ, லேக் கவுன்ட்டியில் உள்ள தமிழர்கள் சங்கம், அகரம் தமிழ் அகாடமி, அன்னை தமிழ் அகாடமி, இந்தியா தமிழ்ச் சங்கம், செயின்ட் லூயிஸ், கிரேட்டர் மில்வாக்கி, மெக்லீன் மாவட்டம், மிச்சிகன், அயோவா, விஸ்கான்சின், வடகிழக்கு விஸ்கான்சின், மினசோட்டா, டென்னசி, கென்டகி, கொலம்பஸ், கன்சாஸ், வடகிழக்கு ஒஹியோ, பியோரியா, டேட்டன், கிரேட்டர் சின்சினாட்டி, குவாட்சிட்டி ஆகிய பகுதிகளில் செயல்படும் தமிழ்ச் சங்கங்கள், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம், உலகளாவிய எங்கள் குழுக்கள் சங்கம், தமிழ்தொழில்நுட்ப தொழில் முனைவோர் கவுன்சில், எழுச்சி அமெரிக்கா சங்கம், அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கம், அமெரிக்க தமிழ்ப் பள்ளிகள் சங்கம் ஆகியசங்கங்களின் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்தனர். அப்போது அதிகஅளவில் முதலீடுகள் கிடைக்க வாழ்த்து தெரிவித்தனர்.

அமைச்சர் டிஆர்பி.ராஜா,அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

x