பிரதமர் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது ஏன்? - ஆர்.எஸ்.பாரதி கூறிய காரணம்


ஆர்.எஸ்.பாரதி

பிரதமர் நரேந்திர மோடியின் கல்பாக்கம் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி காரணம் தெரிவித்துள்ளார்.

கல்பாக்கம் அணு மின் நிலையம்

தமிழ்நாட்டுக்கு ஒரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று வந்துள்ளார். சென்னைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து கல்பாக்கத்துக்கு விமானப் படை ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அங்கு ஈணுலைத் திட்ட செயல்பாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். பிரதமரின் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி

கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:

"கல்பாக்கம் ஈணுலை தமிழ் மக்கள் விருப்பத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் திட்டம். எனவே இந்த விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டை பாழ்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, இத்தகைய திட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. குஜாராத்திலோ, உத்தரப் பிரதேசத்திலோ ஈணுலை அமைக்காமல் தமிழ்நாட்டில் கொண்டுவருவதற்கு என்ன காரணம்?" இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...


தேர்தல் 2024 | மகனை ஸ்கூலுக்கு அனுப்பற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு... நடிகர் வடிவேலு பேச்சு!

x