கனிமொழி எம்பி பங்கேற்ற கூட்டத்தில் போதை ஆசாமி ரகளை; வைரலாகும் வீடியோ!


கனிமொழி பொதுக்கூட்டத்தில் ஒலி பெருக்கி கோபுரத்தில் ஏறிய போதை நபர்

விளாத்திக்குளத்தில் திமுக எம்பி- கனிமொழி பங்கேற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் போதை ஆசாமி ஒருவர் ஒலிபெருக்கி கோபுரத்தில் ஏறி ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி எம்பி-யும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி பங்கேற்று பேசினார். அப்போது பொதுக்கூட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கி கோபுரத்தில் ஏறி ரகளை செய்தார்.

விளாத்திக்குளம் திமு பொதுக்கூட்டத்தில் பேசிய எம்பி-கனிமொழி

இதனைப் பார்த்த எம்பி-கனிமொழி அந்த நபரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். ஆனாலும் அவர் தொடர்ந்து கோபுரத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்தவர்களும், போலீஸாரும் அந்த கோபுரத்தில் ஏறி, ரகளை ஆசாமியை கீழே இறக்கினர்.

இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது... 8.20 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

x