அடேயப்பா, இத்தனை தனிநபர் மசோதாக்கள் நிலுவையிலா?: மக்களவை செயலகம் தந்த அதிர்ச்சி தகவல்!


இந்திய நாடாளுமன்றம்

மக்களவையில் 713 தனிநபா் மசோதாக்கள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

அரசால் கொண்டுவரப்படாமல் எம்.பி.க்களால் கொண்டுவரப்படும் மசோதாக்கள் தனிநபா் மசோதாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு விவகாரம் தொடா்பாக புதிதாக சட்டத்தைக் கொண்டு வரவோ அல்லது ஏற்கெனவே உள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது அவசியம் என்று எம்.பிக்கள் கருதினால், அது தொடா்பாக அவா்கள் தனிநபா் மசோதாக்களை தாக்கல் செய்யலாம். அந்த மசோதாக்கள் மீது சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்கம் அளிப்பார். அரிதாகவே தனிநபா் மசோதா மீது வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில், மக்களவை செயலகம் வெளியிட்ட தகவலில், அந்த அவையில் 713 தனிநபா் மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. பொது சிவில் சட்டம், பாலின சமத்துவம், பருவநிலை மாற்றம், விவசாயம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக அந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

x