ஓய்வறியாச் சூரியன் என்பது கருணாநிதிக்கான அடைமொழி. அதை வெறும் அடைமொழியாக மட்டுமில்லாமல் அதற்கான அர்த்தமாகவும் விளங்கியவர் கலைஞர் மு.கருணாநிதி.
ஆட்சியில் இருக்கும் போது தினந்தோறும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அதிகாரிகளை அழைத்து நிலவரம் கேட்கத் தவறியதில்லை. அன்றைய தின, வார இதழ்களை படித்து முடித்து விட்டு, அதில் வந்திருக்கும் செய்திகளின் அடிப்படையில் அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ தொடர்பு கொண்டு விளக்கம் கேட்பார். அதிகாலையில் எழுந்திருக்கிறாரே இரவில் சீக்கிரம் படுக்கப் போய்விடுவாரா? என்றால் உறங்கப் போகும் நேரத்தை அவர் அவ்வளவு சீக்கிரம் முடிவு செய்வதில்லை. கொஞ்சம் முன்னால் படுக்கப் போய்விட்டால் புத்தகம் படிப்பது அவரது வழக்கம். அந்த ஓய்வறியாச் சூரியனின் கடந்த காலத்தை நினைவுபடுத்தும் சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு நம் வாசகர்களுக்காக...
Source : https://kamadenu.hindutamil.in