ஆல் தி பெஸ்ட் மாணவர்களே... இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது... 8.20 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்

தமிழ்நாடு முழுவதும் இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் 8.20 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுத உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வருகிற 26ம் தேதி துவங்க உள்ளது. இதனிடையே 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்குகிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்

தமிழ்நாட்டில் இந்த தேர்வுகளை மொத்தம் 8.20 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 7,500 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 3.89 லட்சம் மாணவர்கள் மற்றும் 4.31 லட்சம் மாணவிகள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு துவங்கும் இந்த தேர்வுகள் பிற்பகல் 1:15 மணி வரை நடைபெறும். இந்த தேர்வுகளை கண்காணிக்க 46 ஆயிரத்து 800 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்

முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்க்கவும் எடுத்துக் கொள்ளப்படும். பொதுத்தேர்வுகளை ஒட்டி தேர்வு மையங்களான பள்ளிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

x