மெரினாவில் தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கீடு: மாற்று திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்? - மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு


சென்னை: மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் ரூ.47 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில்ஏற்கெனவே மெரினாவில் கடைநடத்தி வரும் உரிமம் பெற்றுள்ள வியாபாரிகளுக்கு 900 தள்ளுவண்டி கடைகள் வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத கடைகளை ஒதுக்கக்கோரி தமிழ்நாடு மாற்றுத் திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நடந்தது. அப்போது இந்தக் கடைகளில் எத்தனை கடைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் 2 வாரங்களில் பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டு விசா ரணையை தள்ளிவைத்துள்ளனர்.

லூப் சாலை விவகாரம்: இதேபோல, மெரினா லூப் சாலையின் இருபுறமும் மீனவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசல் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல்தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘லூப் சாலையில் புதிதாகஅமைக்கப்பட்ட மீன் சந்தை கடந்தஆக.12-ம் தேதி திறக்கப்பட்டு சிலருக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள் ளன. அப்பகுதி கோயில் திருவிழாகாரணமாக மற்ற கடைகளுக்கானஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. அந்த கடைகளும் முறையாக ஒதுக்கப்படும்.

இதுதொடர்பான முழுமையான பட்டியலைத் தாக்கல் செய்ய 2 வாரகால அவகாசம் வழங்க வேண்டும்’’எனக் கோரினார். அதையடுத்து நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

x