மோடி முதலிடம்... அமித்ஷா இரண்டாமிடம்... 2024ல் சக்தி வாய்ந்த டாப் 100 இந்தியர்கள் பட்டியல் வெளியீடு!


பாஜக தலைவர்கள் அமித்ஷா மற்றும் மோடி

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் இந்த ஆண்டின் டாப் 100 சக்திவாய்ந்த இந்தியர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது. இதில், முதலிடத்தில் மோடியும், இரண்டாம் இடத்தில் அமித்ஷாவும் இடம்பெற்றுள்ளனர். முதல் 10 இடங்களில் பாஜக, ஆர்எஸ்எஸை சேர்ந்தவர்களே இடம் பெற்றுள்ளனர்.

முதல் இடத்தில் உள்ள மோடிக்கு, ஆண்டுதோறும் அவரது மதிப்பு உயர்ந்து வருகிறது. அவரது எக்ஸ் தளத்தின் கணக்கை 95.6 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். மோடிக்கு அடுத்தப்படியாக அதிக சக்தி படைத்த நபராக அமித்ஷா உள்ளார். 2023ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலஙகலில் பாஜக பெற்ற வெற்றிக்கு அமித்ஷாவின் வியூகமே காரணம் என்று கூறப்படுகிறது. மூன்றாம் இடத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்கு அவருடைய பங்கு முக்கியதாக பார்க்கப்படுகிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

4வது இடத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் உள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரம், 370 வது சட்டப்பிரிவு ரத்து, கொலீஜியம் மறுவடிவமைப்பு உள்ளிட்டவற்றில் அவரது பங்கு முக்கியமானது. 5 வது இடத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளார். ரஷ்யாவின் எண்ணெய் தடை, காலிஸ்தான் பிர்சசினையை அவர் அணுகிய விதம் பாராட்டுக்குரியது. 6 வது இடத்தில் உள்ள யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்து பாஜகவின் முக்கிய தலைவராகவும் உள்ளார்.

இது போல, அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர் ராஜ்நாத் சிங், தொழிலதிபர் கெளதம் அதானி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதில், 16வது இடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இடம் பெற்றுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் தமிழகத்தில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

திமுக - மநீம தொகுதி உடன்பாடு இன்று கையெழுத்தாக வாய்ப்பு!

x