திமுக - மநீம தொகுதி உடன்பாடு இன்று கையெழுத்தாக வாய்ப்பு!


தமிழக முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்று தெரிய வாய்ப்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொடர்பாக தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள பாஜகவும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , மதிமுக ஆகிய கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்து போட்டியிட உள்ளது.

கமல்ஹாசன்

மக்களவைத் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்ய கட்சி செயற்குழு நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் திமுகவுடன் மநீம தொகுதி உடன்பாடு இன்று கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில், கமல்ஹாசன் 'தக் லைஃப்' படப்பிடிப்பிற்காக இன்று வெளிநாட்டிற்குச் சென்று விட்டு மார்ச் 10-ம் தேதி தான் சென்னை திரும்ப உள்ளார். எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையை அவர் இன்று இறுதி செய்ய வாய்ப்பு அதிகம் என்று மநீம கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

x