திருச்சியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்


திருச்சி: திருச்சி திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடக்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட வனத்துறை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவெறும்பூரில் உள்ள அரசு தொழி்ற்பயிற்சி நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இப்பணியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடக்கி வைத்தார். இதில், மா, பலா, தென்னை, முருங்கை, வில்வம், வேம்பு, அரசு உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வனத்துறை மூலம் வழங்கப்பட்டு கூத்தைப்பார் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவு செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில், கூத்தைப்பார் பேரூராட்சி துணைத் தலைவர் பழனியாண்டி, திருச்சி வனச் சரக அலுவலர் ரவி, வன விரிவாக்க அலுவலர் சரவணகுமார், கூத்தைப்பார் திமுக செயலாளர் தங்கவேல், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

x