கும்பகோணத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க கோட்ட மாநாடு


கும்பகோணம்: கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் அகில இந்தியக் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க கோட்ட மாநாடு நடைபெற்றது.

கோட்டத் தலைவர் ஜி.கனகசபாபதி தலைமை வகித்தார், கோட்டப் பொருளாளர் பி.மகேஷ் வரவேற்றார். மாநிலச் செயலாளர் வி.ஜி.சாந்தமூர்த்தி, மாநிலத் துணைத் செயலாளர் இரா.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் கிருஷ்ணகிரி கோட்டத் தலைவர் வி.லோகநாதன், கோட்டச் செயலாளர்கள் எஸ்.சரவணன், எஸ்.இளங்கோவன், ஏ.சோமு,வி,கிருஷ்ணன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்,

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஊழியர்களின் பணியினை 8 மணி நேரமாக்கி, நிரந்தர ஊழியராக்க வேண்டும், கம்லேஷ் சந்த்ரா கமிட்டியின் பரிந்துரைப்படி 6 மாதகால விடுப்பை அனுமதித்துப் பணி ஓய்வின் முடிவில் பணமாக வழங்க வேண்டும். பணி ஓய்வுக்குப் பின் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கிளை தபால் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வரும் பராமரிப்பு தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

காலிப் பணியிடங்களுக்கு, நீண்டகாலமாக தற்காலிகமாக பணியாற்றி வருபவர்களை நியமிக்க வேண்டும். அஞ்சல் துறையைத் தனியார் மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். இதற்கு கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், அந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், பஞ்சப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கோட்டச் சங்க ஆலோசகர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

x