ஆகஸ்ட் மாதத்தில் வாங்காதவர்கள் துவரம் பருப்பு, பாமாயிலை செப்.5-ம் தேதி வரை பெறலாம்


சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தேவையான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதனால் அடுத்தடுத்த மாதங்களில் பெறப்படாத துவரம் பருப்புமற்றும் பாமாயிலைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பல ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் சீராக விநியோகிக்கப்படவில்லை.

இந்நிலையில், உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆகஸ்ட் மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் வரும் 5-ம் தேதி வரைபருப்பு, பாமாயிலை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x