இளம் பெண்ணின் செயலால் பதறிய பிரதமர் மோடி... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!


பிரதமர் மோடியை பதற வைத்த இளம்பெண்

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது பிரதமரிடம் பேச விரும்பிய இளம் பெண் ஒருவர் மின்விளக்கு டவரின் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தெலங்கானாவில் பிரதமர் மோடி பேச்சு

பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ”தெலங்கானா மாநிலம் உதயமானதும் முதல் முதல்வர் பட்டியலினத்தவரை சேர்தவருக்கு வழங்கப்படும் எனக் கூறிய கேசிஆர், பிறகு அந்த நாற்காலியை தானே பறித்துக் கொண்டார். சுதந்திரத்திற்கு பிறகு அனைத்து அரசியல் கட்சிகளும் மாதிகா சமூக மக்களை மோசம் செய்தது. பட்டியல் இனத்தவருக்கு 3 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்ன பிஆர்எஸ் கட்சி, அதை நிறைவேற்றவில்லை. அம்பேத்கரை தோற்கடித்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியால் தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படாமல் போனது.” இவ்வாறு பேசினார்.

தெலங்கானாவில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இளம் பெண் ஒருவர் அங்கிருந்த மின்விளக்கு டவரின் மீது ஏறி பிரதமரிடம் பேச முயன்றார், இதனைக் கண்ட பிரதமர் மோடி, அதிர்ச்சி அடைந்து, அந்த பெண்ணை ”கீழே இறங்குங்கள் ஷாக் அடிக்கப் போகிறது” என்று பதபதைப்புடன் கேட்டுக்கொண்டார். மேலும் உங்களிடம் பேசுகிறேன் என்று பிரதமர் மோடி கூறியதை அடுத்து, டவரிலிருந்து அப்பெண் கீழே இறங்கினார். இதனால் பொதுக்கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

x