சென்னையில் மமக நிர்வாகி மீது தாக்குதல்...திமுக செயலாளர் மீது வழக்கு!


காவல் நிலையத்தில் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகியை தாக்கியதாக திமுக வட்டச் செயலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யயப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான அஸ்லாம்

சென்னை வியாசர்பாடி அடுத்த எருக்கஞ்சேரி பார்த்தசாரதி தெருவில் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களின் படிவத்தை வீடு வீடாக சென்று திமுகவைச் சேர்ந்த பெண்கள் கொடுத்துள்ளனர். அப்போது பார்த்தசாரதி ரெட்டி தெரு பகுதியில் வசிக்கும் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி அஸ்லாம் என்பவரிடம் அந்தப் பெண்கள் நலத்திட்ட பயன்பெறும் படிவத்தை கொடுத்துள்ளனர்.

இதனைப் பெற்று கொண்ட அஸ்லாம் அவர்கள் கண்முன்னே படிவத்தை வாங்கி கிழித்துப் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்கள் திமுக வட்ட செயலாளர் ஹரிதாஸ் என்பவரிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து ஹரிதாஸ் தனது கட்சியினருடன் அஸ்லாம் வீட்டிற்கு சென்று சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அஸ்ஸாம் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தனர்.‌ அதுமட்டுமின்றி மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி 50-க்கும் மேற்பட்டோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நேற்று இரவு திரண்டு, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோரிக்கை விடுத்தனர். அப்போது அங்கு வந்த திமுகவினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.‌ பின்னர் ஆய்வாளர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொடுங்கையூர் போலீஸார், அஸ்ஸாம் புகாரின் பேரில் திமுக வட்டச் செயலாளர் ஹரிதாஸ் உள்ளிட்டோர் மீது மிரட்டல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். போல் திமுகவினர் அளித்த புகாரில் பேரில் அஸ்ஸாம் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x