ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானம் மேம்பாடு: ரூ.30 லட்சம் நிதி வழங்கினார் உதயநிதி


சென்னை: இந்தோனேசியா மற்றும் ஜப்பானில் நடைபெறவுள்ள பாரா பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர் ஜெகதீஷ் டில்லிக்கு, செலவின தொகையாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையை சென்னை முகாம் அலுவலகத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நேற்று வழங்கினார்.

இதைத்தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில்பங்கேற்கவுள்ள 6 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.15.45 லட்சத்துக்கான காசோலையையும், 12 வீரர்களுக்கு ரூ.9.55 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

இதையடுத்து, சென்னையின் எஃப்சி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விளையாட்டு வீரர்கள் 2024 முதல் 2026 வரை நடைபெற உள்ள சென்னையின் எஃப்சி கால்பந்து அணி பயிற்சியை மேற்கொள்ளவும், போட்டிகள் நடத்தவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் உள்ள‘பி’ மைதானம் மேம்படுத்தப்பட உள்ளது.

இதற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.30 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி, சென்னையின் எஃப்சி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்திடம் வழங்கினார்.

x