மருத்துவ ஆலோசகர், சிறப்பு மருத்துவர்களுக்கு சவுதியில் வேலைவாய்ப்பு


சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவ ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்.

மருத்துவ கல்வித் தகுதியுடன் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 55-க்குள் இருக்க வேண்டும். இதற்கான நேர்காணல் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியத்துடன் உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவையும் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9566239685 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) நேரடியாக பதிவு செய்து பயன்பெறலாம்.

x