பாலியல் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தியவர்களுக்கு கடும் தண்டனை: பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்


சென்னை: குழந்தைகளை பாலியல் தொழிலில்ஈடுபடுத்தியவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனதமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ராஜலட்சுமி தலைமையிலான போலீஸார் வளசரவாக்கம் ஜெய் நகரில் உள்ள வீட்டில் ஓரிரு நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றி, பெண் உள்பட அவரது குடும்பத்தினரை கைது செய்தனர்.

விசாரணையில், பிளஸ் 2 படித்துவரும் தனது மகளுடன் அதே பள்ளியில் படிக்கும் அவரது தோழிகளை, அந்த பெண் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களிடம் ஆசை வார்த்தைகூறி ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை சிறுமிகளை விலை பேசி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாகபாஜக மாநில துணை தலைவர்நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: ரவுடி கருக்கா வினோத்துக்கு நெருக்கமான 37 வயதான பெண்ணின் வீட்டில் என்ஐஏ சோதனை யிடும்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும், மேலு‌ம் பலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாநில விபச்சார தடுப்பு பிரிவுக்கு என்ஐஏ தகவல் அளித்தது.

அந்த பெண் தன் மகளின் பள்ளித்தோழிகளிடம் நெருங்கிப் பழகி, நடனம் கற்றுத் தருவதாகவும், அழகுக் கலை கற்றுத் தருவதாகவும் ஆசை காட்டி அந்த குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திசீரழித்த அவலம் வெளிப்பட்டது. ஐதராபாத், கோவை போன்ற நகரங்களுக்கு அவர்களை அழைத்து சென்று கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். இதுவரை 7 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அந்த நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப் பட வேண்டும். அவசரகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்,தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என தெரிந்துகொள்ளாமல், தங்கள் குழந்தை களின் எதிர்காலத்தை தொலைத்து கொண்டிருப்பது பெரும் துயரம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

x