சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட ரூ.265.44 கோடி மதிப்பிலான பொருட்கள் அழிப்பு


சுங்கத்துறையின் கடத்தல் தடுப்பு ஆணையரகத்தின் சார்பில் கைப்பற்றப்பட்ட ரூ.265.44 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்களை அரியலூர் அல்ட்ராடெக் சிமென்ட் ஆலையில் உள்ள எரிஉலையில் இட்டு இன்று அழிக்கப்பட்டது.

திருச்சி: திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுங்கத்துறையின் கடத்தல் தடுப்பு ஆணையரகம் சார்பில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ரூ.265.44 கோடி மதிப்பிலான பொருட்கள் இன்று அழிக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு காலக்கட்டங்களில் கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் நம் நாட்டுக்குள் கொண்டு வர தடை செய்யப்பட்ட பொருட்களை சுங்கத்துறையின் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதில், 16.800 கிலோ கஞ்சா, 4.730 கிலோ ஹாஷிஸ் ஆயில், 23.420 கிலோ சூடோபிட்ரின், 39 கிலோ மெத்தாம்பெட்டமைன், 149 கிலோ ஹாஷிஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள், 702 பெட்டி சிகரெட்டுகள், 6.10 கிலோ குங்குமப்பூ, 258 இ-சிகரெட்டுகள், 128 கிலோ கசகசா, 704 சோமாட்ரோபின் ஊசி குப்பிகள் மற்றும் 694 கிக்ட்ரோபின் குப்பிகள் உள்ளிட்ட ரூ.265.44 கோடி மதிப்பிலான பொருட்களை சுங்கத்துறையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில், அரியலூரில் உள்ள அல்ட்ராடெக் சிமென்ட் ஆலையில் உள்ள எரிஉலையில் இட்டு அழித்தனர்.

x