அடுத்தக் கட்ட அதிரடி ... நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் இன்று திடீர் ஆலோசனை!


நடிகர் விஜய்

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியைத் தொடங்கினார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த 2-ம் தேதி நடிகர் விஜய் அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

இதற்கிடையில், விஜயின் கட்சியின் பெயரில் தவறு இருப்பதாகவும், 'க்' என்ற எழுத்து விடுபட்டுள்ளதாகவும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். இது தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களி நிலையில், கட்சியின் பெயரில் 'க்' சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் இன்று (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது.

நமது கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x