உடல் தானம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைப்பு @ அரியலூர்


அரியலூர்: அரியலூரில் உடல் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் அண்ணா சிலை அருகே, அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட், அகிலம் யோகக்கலைப் பயிலரங்கம், அரசு கலைக் கல்லூரி மனமன்றம், தத்தனூர் அம்மா மனநல காப்பகம், அன்பாலயம் மாற்றுத்திறனாளி அமைப்பு, சாந்தா முதியோர் இல்லம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி உடற்கூறுயியல் துறை ஆகிய அமைப்புகள் சார்பில் உடல்தான விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை (ஆக.29) நடைபெற்றது.

பேரணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அகிலம் நிறுவனர் சோபனா பன்னீர்செல்வம், எம்எல்ஏ-வான கு.சின்னப்பா, மாவட்ட எஸ்பி-யான ச.செல்வராஜ், நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்ட மருத்துவக்கல்லூரி மற்றும் கலைக்கல்லூரி மாணவர்கள் உடல்தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பேரணியாக அரியலூரின் முக்கிய வீதிகளில் சென்றனர்.

x